கருங்குளம் கோவிலில் பவித்ரோத்ஸவம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 27 ஜூலை, 2026

கருங்குளம் கோவிலில் பவித்ரோத்ஸவம்.

கருங்குளம் கோவிலில் பவித்ரோத்ஸவம். 

செய்துங்கநல்லூர் ஜூலை 27. தாமிரபரணி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள கருங்குளம் வகுளகிரி மலையில் உள்ள வெங்கடாசலபதி கோயிலில் பவித்ரோத்ஸவம் நடந்தது. 

ஓவ்வொரு ஆண்டும் கோவில் நடைமுறையில் ஏற்படும் விடுதல்களுக்கு பரிகாரமாக பவித்ரோத்ஸவம் நடப்பது வழக்கம். 

கடந்த ஜூலை 25. ந்தேதி தொடங்கி 3 நாட்களில் நடைபெறுகிறது. நேற்று மூலவர். உற்சவர் தாயார்கள் மற்றும் சன்னதி பெருமாள்களுக்கும் பவித்ரா மாலைகள் சாற்றப்பட்டது. 

இன்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம் 930 மணிக்கு திருமஞ்சனம். 10 மணிக்கு உற்சவர் சீனிவாசப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் வாகன குறட்டிற்கு எழுந்தருளினார். அர்ச்சகர்கள் ராஜேஷ் தலைமையில் ஹோமம் செய்தனர். 

பின்னர் 12.15 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது. தீபாராதனை வேத கோஷங்கள் சாத்து முறை முடிந்து தீர்த்தம். சடாரி. பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. நாளை மாலை மூலவர். உற்சவர் மற்றும் சன்னதி பெருமாள்களிடம் இருந்து பவித்ரா மாலைகள் பணிகளையும் படும். 

இந்நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நிஷாந்தினி அறங்காவலர் குழுத் தலைவர் சின்னத்துரை. மற்றும் உறுப்பினர்கள் பவித்ரோத்ஸவ கமிட்டியினர்சின்னக் கண்ணன் சேகர். 

கள்ளப்பிரான் கோவிலில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி, வெங்கடேசன் . நடராஜன். கண்ணன். கணேசன். மகாதேவன். வெங்கட்ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad