கன்னியாகுமரி மாவட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றமில்லா சமுதாயத்தை உருவாக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஸ்டாலின் “ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம்” மிக தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் காவல்துறையினரும் பொதுமக்களும் கைகோர்த்து செயல்படுவதுதான்.
மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு உட்கோட்ட அதிகாரிகள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் “நம்ம ஊரு காவலர்கள்” நேரடியாகச் சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் இதுவரை 7,809 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.
சிசிடிவி கேமராக்களை பொருத்துவதை பற்றியும் சிசிடிவி கேமராக்களை பயன்படுத்துவதன் மூலம் குற்றங்களை முன்கூட்டியே தடுக்கவும், அசம்பாவிதங்கள் ஏதேனும் நடந்தால் குற்றவாளிகளை மிக விரைவாகக் கண்டறியவும் சிசிடிவி கேமராக்கள் பெரும் துணையாக இருக்கின்றன.
மேலும் இதுவரை நமது மாவட்டத்தில் 1,426 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கிராமத்தையும் முழுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தொலைநோக்கு பார்வையின்படி,
மேலும் பல இடங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவது குறித்தும், அதன் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்தும் பொதுமக்களிடையே விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக