அங்கன்வாடி பணியாளர்களை அவமதி த்து அவதூறு பரப்பிய நபர் மீது தமிழக அரசு உரிய சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் !
வேலூர் , ஜூலை 14 -
வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் -
பணிப்பளுவுக்கு ஏற்ப ஊதியம், அரசு ஊழியர் அந்தஸ்து - அங்கன்வாடி பணியாளர்களை அவமதித்து அவதூறு பரப்பிய நபர் மீது தமிழக அரசு உரிய சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சத்துவாச்சா ரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவல கம் எதிரில், தமிழ் மாநில அனைத்து அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்கள் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் என்.விஜயலட்சுமி தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட் டச் செயலாளர் ஜூலி, மாவட்டம் பொரு ளாளர் வி. விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட் டத்தில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு அரசு ஊழியர் அந்தஸ்து வழங்குதல், பணிப்பளுவுக்கு ஏற்ப மாதாந்திர ஊதி யம் நிர்ணயித்தல், கூடுதல் பணிச்சுமை யை குறைத்தல், ஐசிடிஎஸ் (ICDS) திட்டத் தின் அடிப்படை நோக்கத்தை பாதிக்கும் கூடுதல் அலுவல் பணிகளைத் தவிர்த் தல், பணிச்சுமைகளுக்கு ஏற்ப ஊதியம் வழங்குதல், குழந்தைகள் மற்றும் கர்ப் பிணிப் பெண்களின் நலப்பணி களில் முழுமையாக ஈடுபட ஏதுவான சூழலை உருவாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.மேலும், அங்கன் வாடி ஊழியர்களின் நியாயமான கோரிக் கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, சமூக வலைதளங்கள் மூலம் நடைபெறும் விமர்சனங்கள் மற்றும் கூடுதல் நிர்வாக அழுத்தங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக அரசால் ஒவ்வொரு குழந்தையும் தாயும் ஆரோக்கியமாக இருக்க வேண் டும் தமிழகத்தில் ஊனமில்லா குழந்தை களை பெற்றெடுக்க வேண்டும் என்ற உறுதியும் முழு உழைப்பையும் அர்ப்பணி த்து தாய் மற்றும் குழந்தைகளை இரவு பகல் பாராமல் கூர்ந்து கவனித்து கண்காணித்து தாய்க்கும் குழந்தைக்கும் மகத்தான சேவைகளை செய்து வரும் அங்கன்வாடி பணியாளர்களை அவம தித்து அவதூறு பரப்பிய நபர் மீது தமிழக அரசு உரிய சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டமானது தமிழக முழு வதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தலைமை இடத்தில் நடை பெற்றது குறிப்பிடத்தக்கது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக