தூய சவேரியார் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
திருநெல்வேலி: பாஷ் லிமிடெட் (Bosch Limited) மற்றும் பாஷ் இந்தியா ஃபவுண்டேஷன் ஆதரவில் இயங்கும் சேஃப்டி ரிசர்ச் ஃபவுண்டேஷன் (Safety Research Foundation - SRF) அமைப்பானது, இளைஞர்களிடையே சாலை பாதுகாப்பு கலாச்சாரத்தை உருவாக்கும் நோக்கில் ‘BRACE’ (BOSCH’s Road Safety Awareness and Community Engagement) திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரி (தன்னாட்சி) மற்றும் சேஃப்டி ரிசர்ச் ஃபவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் 'சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் சிறப்புப் பயிற்சி' கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் இளங்கோ மணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து,
சேஃப்டி ரிசர்ச் ஃபவுண்டேஷனின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துவேல் தனது உரையில் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம் மூலம், மாணவர்களை 'சாலை பாதுகாப்பு தூதர்களாக' மாற்றுவதே முதன்மை இலக்காகும்.
மேலும், நெடுஞ்சாலைப் பாதுகாப்பு தணிக்கை (Road Safety Audit) மற்றும் விபத்துப் பகுதிகளைக் கண்டறிந்து (Blackspot Identification) கட்டமைப்பு சீரமைப்புகளைப் பரிந்துரைப்பதன் மூலம் விபத்தில்லா இந்தியாவை உருவாக்க
சேஃப்டி ரிசர்ச் ஃபவுண்டேஷன்
பாடுபட்டு வருகிறது. என இத்திட்டத்தின் நோக்கம் குறித்து விரிவாக விளக்கினார்.
இந்நிகழ்ச்சியில் தூய சவேரியார் கல்லூரியின் துணை முதல்வர் அருட்தந்தை முனைவர் அருள் ரவி சே.ச. கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினார்
திருநெல்வேலி காவல்துறையின் சமூக வலைத்தளப் பொறுப்பாளர் வெங்கட்ராமன் முருகன் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
சிறப்பு அழைப்பாளராக
காவல்துறை கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், விபத்துகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் முக்கிய காரணங்களாக விளங்கும் அன்றாட 4 முக்கிய விதிமீறல்கள் குறித்து சுட்டிக்காட்டினார்:
1. சிறார்கள் வாகனம் ஓட்டுதல்: ஓட்டுநர் உரிமம் இன்றி சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். இதனைத் தடுக்க பெற்றோரும் கல்வி நிறுவனங்களும் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்.
2. எதிர் திசையில் பயணித்தல் (Wrong-way Driving): குறுக்கு வழியில் செல்வதற்காகவும், நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகவும் தவறான பாதையில் வாகனங்களை ஓட்டுவது நேரடி மோதல்களுக்கும் கோர விபத்துகளுக்கும் வழிவகுக்கிறது.
3. மதுபோதையில் வாகனம் ஓட்டுதல்: மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது காவல்துறை எவ்வித சமரசமுமின்றி கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
4. அதிவேகம்: சாலைகளில் வாகனங்களை அதிவேகமாக இயக்குவதே அதிகப்படியான உயிரிழப்புகளுக்கு முதன்மைக் காரணமாக அமைகிறது.
இவ்விதிமீறல்களைத் தவிர்ப்பதன் மூலம் தமிழ்நாட்டில் விபத்துகளால் ஏற்படும் அகால மரணங்களைப் பெருமளவு குறைக்க முடியும் என்றும், வருங்காலத்தில் தமிழ்நாட்டை "விபத்தில்லா மாநிலமாக" (Zero Accident State) மாற்றுவதற்கு இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தூய சவேரியார் கல்லூரியின் வங்கி மற்றும் நிதியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் மார்ட்டினா பிரான்சிஸ்கா நன்றியுரை ஆற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக