மேச்சேரி, ஜூலை 9:
மேச்சேரியில் உள்ள காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2026–27 கல்வியாண்டில் முதலாம் ஆண்டு சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கான வரவேற்பு மற்றும் வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை (09.07.2026) சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் செல்வகுமார் தலைமை வகித்து, கல்லூரியின் கல்விச் செயல்பாடுகள், மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து விளக்கி, புதிய மாணவர்களை வரவேற்றார்.
தி காவிரி கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் ரேவதி இளங்கோவன் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். தி காவிரி கல்வி நிறுவனங்களின் செயலாளர் பேராசிரியர் இளங்கோவன் தலைமையுரையாற்றும்போது, மாணவர்கள் ஒழுக்கம், கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை சரியான முறையில் பயன்படுத்தி கல்வியில் முன்னேற வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், "ஏழைக்குக் கல்வி கொடுத்தல் தான் சிறந்த தர்மம்" என்ற கருத்தை வலியுறுத்தி, கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, தி காவிரி கல்வி நிறுவனங்களின் இணைச் செயலாளர் பொறியாளர் ஹரிசங்கர் மாணவர்களின் சுயசிந்தனை, கற்றல் திறன் மற்றும் தனித்திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் வாழ்த்துரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் தி காவிரி கல்வி நிறுவனங்களின் கௌரவத் தலைவர் முனைவர் நடேசன், தலைவர் அன்பழகன், தாளாளர் இராமநாதன், துணைத்தலைவர் மதன் கார்த்திக், துறைத்தலைவர்கள், உதவிப் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மேலும், முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

.jpeg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக