வேலூர் மாநகராட்சி மண்டலம் 1 அலு வலகம் எதிரே கால்வாயில் குப்பைகள் தேக்கம் – அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
வேலூர் மாவட்டம் மாநகராட்சி மண்டலம் 1 அலுவலகம் எதிரே உள்ள கால்வாயில் கடந்த இரண்டு நாட்களாக குப்பைகள் கொட்டப்பட்டு தேங்கி கிடப்பதாக கூறப் படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகா தார சீர்கேடு ஏற்படும் சூழல் நிலவுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் கால் வாயில் குப்பைகள் தேங்குவதால் கொசு க்கள் மற்றும் நோய்த்தொற்று பரவும் அபாயமும் இருப்பதாக சமூக ஆர்வலர் கள் கவலை தெரிவித்துள்ளனர். மா நகராட்சி மண்டலம் 1 அலுவலகம் எதிரி லேயே இந்த நிலை நீடிப்பது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மாநகரா ட்சி அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி, கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி, மீண்டும் குப்பை கள் கொட்டப்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக