உளுந்தூர்பேட்டை–பாடலூர் தேசிய நெடுஞ்சாலையில் செப்.1 முதல் புதிய சுங்கக் கட்டணம் – கார்களுக்கு ரூ.70. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 20 ஆகஸ்ட், 2026

உளுந்தூர்பேட்டை–பாடலூர் தேசிய நெடுஞ்சாலையில் செப்.1 முதல் புதிய சுங்கக் கட்டணம் – கார்களுக்கு ரூ.70.


உளுந்தூர்பேட்டை, ஆகஸ்ட் 20:
 


உளுந்தூர்பேட்டை முதல் பாடலூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில், வாகனங்களுக்கான திருத்தப்பட்ட சுங்கக் கட்டணம் செப்டம்பர் 1, 2026 முதல் அமலுக்கு வர உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 38-ல், கிலோமீட்டர் 192.250 முதல் 285.000 வரையிலான உளுந்தூர்பேட்டை–பாடலூர் பிரிவில் அமைந்துள்ள செங்குறிச்சி மற்றும் திருமாந்துறை ஆகிய இரு சுங்கச்சாவடிகளில் புதிய கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.


தேசிய நெடுஞ்சாலை ஆணையமான NHAI-யின் ஒப்புதலுடன், செப்டம்பர் 1, 2026 அன்று அதிகாலை 12 மணி முதல் திருத்தப்பட்ட கட்டணம் நடைமுறைக்கு வரும் என திருச்சி டோல்வே பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.


வாகனங்களுக்கான புதிய சுங்கக் கட்டணம்

வாகன வகைஒரு முறை பயணம்ஒரே நாளில் பலமுறைமாதாந்திர பாஸ்
கார் / வேன் / ஜீப்ரூ.70ரூ.105ரூ.2,125
இலகுரக வர்த்தக வாகனம் (LCV)ரூ.125ரூ.185ரூ.3,715
லாரி / பேருந்துரூ.250ரூ.370ரூ.7,435
பல அச்சு வாகனம்ரூ.400ரூ.595ரூ.11,950

இதன்படி கார், பயணிகள் வேன் மற்றும் ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒரு முறை பயணத்திற்கு ரூ.70 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் பலமுறை பயணம் செய்வதற்கான கட்டணம் ரூ.105 ஆகவும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.2,125 ஆகவும் உள்ளது.


இலகுரக வர்த்தக வாகனங்களுக்கு ஒரு முறை பயணத்திற்கு ரூ.125, பலமுறை பயணத்திற்கு ரூ.185, மாதாந்திர பாஸ் ரூ.3,715 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


லாரி மற்றும் பேருந்துகளுக்கு ஒரு முறை பயணத்திற்கு ரூ.250, பலமுறை பயணத்திற்கு ரூ.370, மாதாந்திர பாஸ் ரூ.7,435 என அறிவிக்கப்பட்டுள்ளது.


இரண்டு அச்சுகளுக்கு குறைவான பல அச்சு வாகனங்களுக்கு ஒரு முறை பயணத்திற்கு ரூ.400, ஒரே நாளில் பலமுறை பயணத்திற்கு ரூ.595, மாதாந்திர பாஸ் ரூ.11,950 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


பயணிகளுக்கு கூடுதல் செலவு

புதிய சுங்கக் கட்டணம் அமலுக்கு வருவதால் உளுந்தூர்பேட்டை–பாடலூர் வழித்தடத்தை தினசரி பயன்படுத்தும் பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் வர்த்தக வாகன உரிமையாளர்களுக்கு பயணச் செலவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

செப்டம்பர் 1, 2026 முதல் புதிய சுங்கக் கட்டணம் நடைமுறைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad