பேர்ணாம்பட்டு அருகே ரூ.33.30 லட்சம் தார்சாலை தரத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 19 ஆகஸ்ட், 2026

பேர்ணாம்பட்டு அருகே ரூ.33.30 லட்சம் தார்சாலை தரத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் !

பேர்ணாம்பட்டு அருகே ரூ.33.30 லட்சம் தார்சாலை தரத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் !
பேரணாம்பட்டு, ஆக.19
               வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் ஏரிக்குத்தி ஊராட்சி யில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.எஸ். லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.33.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை யை நேரில் பார்வையிட்டு, சாலையின் தரம் மற்றும் பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்தார். மேலும், சாலை அமைக் கும் பணிகள் திட்டமிட்ட தர நிலைகளின் படி மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது குடியாத்தம் வரு வாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு மால், வட்டாட்சியர் தேவி, உதவி பொறி யாளர் பிரித்தா, வட்டார வளர்ச்சி அலு வலர் மீனா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad