பேர்ணாம்பட்டு பேருந்து நிலைய கடைகளை அகற்றி பொதுமக்களுக்கு நிழற்குடை கைஅமைக்க கோரிக்கை!
பேர்ணாம்பட்டு, ஆக.19 -
வேலூர் மாவட்டம் பேர்ணாம் பட்டு பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்றி, பொதுமக்கள் பயன் பெறும் வகையில் நிழற்குடை மற்றும் பயணிகள் அமரும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, அகில இந்திய மக்கள் மனிதநேய கழகத்தின் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் அவர்களிடம் இன்று மனு அளிக்கப்பட்டது அகில இந்திய மக்கள் மனிதநேய கழகத்தின் மாநில செயலா ளர் அங்காளன் தலைமையில், அமைப் பின் பொறுப்பாளர்கள் மற்றும் பேர்ணாம் பட்டு பொதுமக்கள் சார்பில் இந்த மனு அளிக்கப்பட்டது.மனுவில், பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பயன் பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்றி, பயணிகள் சிரமமின்றி காத்திருக்கவும், மழை மற்றும் வெயிலில் இருந்து பாது காப்பாக இருக்கவும் தேவையான நிழற் குடை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதுமனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ், “கடைகள் கட்டப்பட்ட போது நீங்கள் என்ன செய்து கொண்டி ருந்தீர்கள்? இருப்பினும், தற்போது நீங்கள் கூறும் கோரிக்கையை பரி சீலித்து நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு சிறிது காலம் அவகாசம் தேவைப்படும்” என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாடு குறித்து நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் வலியுறு த்தப்பட்டது. பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்து நிலையத் தில் போதிய நிழற்குடை மற்றும் பயணி கள் அமரும் வசதிகளை விரைவில் ஏற்படுத்த வேண்டும் என அகில இந்திய மக்கள் மனிதநேய கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக