சித்தூரில் இருந்து ஆரணிக்கு 10 கிலோ குட்கா கடத்தல் காட்பாடி சோதனையில் கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது !
காட்பாடி , ஆகஸ்ட் 5 -
வேலூர் மாவட்டம் காட்பாடி தமிழக ஆந்திர எல்லைப் பகுதியான காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை சோத னைச் சாவடியில் எஸ்பி தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிமாநிலங்க ளில் இருந்து தமிழகத்திற்கு குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப் படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று அவ்வழியாக வந்தஒரு பேருந்தை போலீசார் நிறுத்திச் சோதனை யிட்டனர். அப்போது பேருந்தில் சந்தேகத் திற்கிடமான முறையில் பயணம் செய்த நபரிடம் விசாரிக்கையில் அவர் திரு வண்ணாமலை மாவட்டம் ஆரணி லைப்ரரி தெருவைச் சேர்ந்த சரவணன் (வயது 40) என்பது தெரியவந்தது
அவரிடம் இருந்த பைகளைச் சோதனை யிட்டபோது ஆந்திர மாநிலம் சித்தூர் பஜார் வீதியில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 10 கிலோ குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 10,000 ஆகும் விசாரணை யில்சரவணன் சித்தூரில் இருந்து குட்கா பொருட்களைக் கடத்தி வந்து ஆரணியில் உள்ள கடைகளுக்குச் சப்ளை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையையடு த்து கடத்தலில் ஈடுபட்ட சரவணனைக் கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக