சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி.யு .போப் பொறியியல் கல்லூரியில் 17 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு தாளாளர் ந. ஜெயக்குமார் சந்தோஷ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர் .ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார்.
இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பிரதம பேராயரின் ஆணையர் பேராயர் டாக்டர்.எஸ். கிறிஸ்டோபர் விஜயன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டமளிப்பு சான்றிதழை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலாளர் எஸ். டி. கே. ராஜன் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல துணைத் தலைவர் குருவானவர் பி.மோசஸ் ஜெபராஜ், தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பொருளாளர் டி.கே.எம். ஜான்சன் டேவிட், தூத்துக்குடி நாசரேத் திருமண்டல குருத்துவ செயலாளர் அருட்திரு .டி.ஜி.ஏ. தாமஸ், ஸ்டாண்டிங் கமிட்டி கல்லூரி நிலை வர குழு செயலாளர் ஜெபச்சந்திரன், சாயர்புரம் பாஸ்ட்ரேட் சேர்மன் அருட்திரு. ஆனந்த் சாமுவேல் ஜாண் தாமஸ், அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிகளின் தாளாளர்கள்,
ஆட்சி மன்ற குழு நிர்வாக உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், சாயர்புரம் பாஸ்ட்ரேட் உறுப்பினர்கள், சாயர்புரம் சபை மக்கள், அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக