பதவி உயர்வு வழங்காமல் கடந்த ஒரு மாதமாக மாவட்ட நிர்வாகம் அலைக்கழிப் பதாக புகார் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 ஆகஸ்ட், 2026

பதவி உயர்வு வழங்காமல் கடந்த ஒரு மாதமாக மாவட்ட நிர்வாகம் அலைக்கழிப் பதாக புகார் !

 பதவி உயர்வு வழங்காமல் கடந்த ஒரு மாதமாக மாவட்ட நிர்வாகம் அலைக் கழிப்பதாக புகார் !


வேலூர் , ஆகஸ்ட் 6 -
வேலூர் மாவட்டம்  பெண் துணை வட்டார வளர்ச்சி  அடுத்த பதவி உயர்வு உள்ளிட்டவை கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளன. துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணி புரி யும் பெண் அலுவலர், பதவிஉயர்வுக்கான அனைத்து தகுதிகளையும் பெற்று பணி யிடமும் காலியாக இருந்தும், அவருக் கான பதவி உயர்வு உத்தரவை மட்டும் வழங்காமல் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.இதனால் அவருக்கு வழங்க வேண்டிய உயர்வு பதவிக்கான ஊதியம் கிடைக்காமல், மாதாந்திர சம்பளமும் குறைவாக வழங்கப்பட்டு வருகிறது.
 மேலும் அடுத்த கட்ட பதவி உயர்வு, பணப்பலன்கள், ஓய்வூதிய கணக்கு போன்றவையும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பதவி உயர்வுக்கான கோப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மாதமாக நிலுவையில் உள்ளது. 
பலமுறை  கேட்டும் எந்த பதிலும் இல்லை
என வேதனை தெரிவித்தார்.இது தொடர்பாக    அலுவலர்கள் சங்கத்தினர், "தகுதியான அலுவலரை இப்படி அலைக் கழிப்பது நிர்வாக சீர்கேடு  இதனால் ஊராட்சி ஒன்றிய பணிகளும் பாதிக்கப் படுகின்றன.உடனடியாக பதவி உயர்வு வழங்கி பணியை ஒழுங்குபடுத்த வேண் டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே மாவட்ட நிர்வாகம் உடனடி யாக தலையிட்டு,  துணை வட்டார வளர்சி அலுவலருக்கு உரிய பதவி உயர்வை வழங்கி, அவருக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பை ஈடுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad