தி.மு.க சார்பில், முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு !
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் பேரூர் தி.மு.கழகம் சார்பில், ஆகஸ்ட்-7 அன்று முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர், டாக்டர்.கலைஞர் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப் பட்டது.நெமிலி கிழக்கு ஒன்றிய செயலா ளர் வடிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, நெமிலி பேரூர் கழக செயலாளர் ஜனார்த்தனன் அவர்கள் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள், நெமிலி அண்ணா சாலையில் அமைதி ஊர்வலமாகச் சென்று, நெமிலி பேருந்து நிலையத்தில் உள்ள,பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு மலர் மாலைஅணி வித்து, பின்னர் அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த முத்தமிழறிஞர், டாக்டர் கலை ஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர்தூவி, மரி யாதை செலுத்தினர். அதனைத் தொடர் ந்து நிர்வாகிகள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சரவணன், வழக்கறி ஞர் கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பி னர் அப்துல் நசீர், ஒன்றிய அவைத் தலை வர் புருஷோத்தமன், துணை செயலாளர் கள் முகமது அப்துல் ரகுமான், பாண்டி யன் , பேரூர் அவைத்தலைவர் சேகர், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப் பாளர் எம்.பி.பாபு, நிர்வாகிகள் வக்கீல் வெங்கடேசன், ரோஷன், பாலு, தமிழ்ச் செல்வன், ஒன்றிய நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக