அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத அருள்மிகு சுப்பிரமணி சாமி திருக்கோவி லில் 48 வது நாள் மண்டல அபிஷேகம் மற்றும் ஆடி கிருத்திகை!
குடியாத்தம், ஆகஸ்டு 7 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எஸ் மோட்டூர் கிராமத்தில் அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணி சாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகை விமர்சையாக நடைபெற்றது இதில் தெய் வீக ஞான குரு சத்தியம்மாள் நல்லாசியு டன் ஆர் பாலாஜி நாயுடு தலைமையில் முருகருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராத னைகள் நடைபெற்றது இந்த நிகழ்ச்சி யில் பி கே சந்திரசேகர் நாயுடு வரவேற் றார்
இதில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகனுக்கு சாத்துப்படி செய்தனர் இதில் சூறாளூர் கிருஷ்ண மூர்த்தி குழுவினர் பண்டரி பஜனை மாலை 3 மணிக்கு குடியாத்தம் கோபால புரம் கலைவாணி நாட்டியப்பள்ளி பரத நாட்டிய நிகழ்ச்சியும் மற்றும் அன்னதான மும் சிறப்பாக நடைபெற்றது. விழாவுக் கான ஏற்பாடுகளை பரம்பரை வழி கோவில் நிர்வாகஸ்தர்கள் ஆர் பாலாஜி நாயுடு ஆர் ராஜாராம் நாயுடு ஆர் வெங் கடாதிரி நாயுடு ஆகியோர் ஏற்பாடு செய்தனர் இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் குமரன் ஒன்றிய குழு உறுப்பினர் கௌரப்பன் ஏசி பாபு நாயுடு மற்றும் சேங்குன்றம் எஸ் மோட்டூர் கிராமவாசிகள் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக