பெரிய மலையில் 50ஆம் ஆண்டு ஆடிக் கிருத்திகை விழா ஆயிரக்கணக்கானோர் காவடி எடுத்து வழிபாடு !
குடியாத்தம் , ஆகஸ்டு 7 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் நெல்லூர் பேட்டை ஊராட்சிக்குட்பட்ட லிங்குன்றம் கிராமத்தில் அமைந்துள்ள பெரியமலை திருமுருகன் சுவாமி கோயி லில் 50ஆம் ஆண்டு ஆடிக் கிருத்திகை விழா வியாழக்கிழமை வெகு விமர்சை யாக நடைபெற்றது.விழாவையொட்டி காலையில் மூலவர் முருகப் பெருமானு க்கு பால், பன்னீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடை பெற்றன. அதனைத் தொடர்ந்து சுவாமி விஸ்வரூப தரிசனம் கொடுத்தார்இதனை முன்னிட்டு குடியாத்தம் மற்றும் சுற்றியு ள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து மலைக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" கோஷம் மலையெங்கும் எதிரொலித்தது.
விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் ஊர் நாட்டாமை ராகவன் தலைமையில் அன்னதானம் வழங்கப் பட்டது. மேலும் தர்மகர்தா ஜலேந்திரன், பலராமன், மேட்டுக்குடி சத்தியராஜ், குட்டி பாபு, சகாதேவன், சக்கரபாணி ஆகியோர் பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்க ளாக எஸ். இராஜேந்திரன், எம். சண்முகம், சந்திரன், தண்டபாணி, இராஜேந்திரன், கதிர்வேலன், சரஸ்வதி, பிச்சாண்டி, வெள்ளி நாயகி, ஜடையப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த கோயிலில் 50ஆம் ஆண்டு ஆடிக் கிருத்தி கை என்பதால் சுற்றி உள்ள கிராமங் களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு மற்றும் குடிநீர் வசதிகள் சிறப்பாக செய்யப் பட்டிருந்தன.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக