108 பால்குடம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்!குடியாத்தம் முத்துமாரியம்மன்கோவிலில் 7-ம் வெள்ளி ஆடி திருவிழா கோலாகலம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

108 பால்குடம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்!குடியாத்தம் முத்துமாரியம்மன்கோவிலில் 7-ம் வெள்ளி ஆடி திருவிழா கோலாகலம்

108 பால்குடம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்!குடியாத்தம் முத்துமாரியம்மன்கோவிலில் 7-ம் வெள்ளி ஆடி திருவிழா கோலாகலம்
குடியாத்தம் , ஆகஸ்ட் 30 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஜெய் பீம் நகர் ஏரிக்கரை அருகே அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் 7-ம் வெள்ளி ஆடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம், பூக்கரகம், தீச்சட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.விழாவையொட்டி புதன்கிழமை இரவு ஸ்ரீ முத்துமாரியம் மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை கள் நடைபெற்றன. தொடர்ந்து காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.இதையடுத்து வியாழக்கிழ மை அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் உள்ளி ட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொ ண்டு கூழ் படைத்து அம்மனை வழிபட்ட னர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சி யாக 7-ம் வெள்ளிக்கிழமையன்று தேவி ஸ்ரீ மாசு படா அம்மன் ஆலயத்தில் இருந்து 108 பால்குடங்களை பக்தர்கள் ஏந்தியபடி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஜெய் பீம் நகர் பகுதி யில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. அங்கு பக்தர் கள் தாங்கள் கொண்டு வந்த பால்குட பாலை கொண்டு அம்மனுக்கு பாலாபி ஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.மேலும் சோலைநகர் பகுதியில் இருந்து பூக்க ளால் அலங்கரிக்கப்பட்ட பூக்கரகம் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பூக்கரகம் அம்மன் சன்னதியில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.திருவிழாவில் பக்தர்கள் அழகு குத்துதல், தீச்சட்டி எடுத் தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் களை செலுத்தினர். பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு ஏற்றி அம்மனுக்கு படையல் வைத்து வழிபட்டனர்.விழாவில் நெல்லூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் என ஏராளமா னோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக் காக விழாக்குழுவினர் பல்வேறு ஏற்பாடு களை செய்திருந்தனர்.விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஊர் பொதுமக் கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டதுவிழாவிற்கு ஊர் தர்மகர்த்தா கு.முனிசாமி, ஊர் நாட்டாமை க.முனிசாமி ஆகியோர் தலை மை தாங்கினர். ஊர் தலைவர் சரவணன், செயலாளர் முருகன், பொருளாளர் நவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ் ச்சியில் புத்தர் நகர் ஊர் தலைவர் செந்தில் பில்டிங் இன்ஜினியர் கண்ண தாசன் விழாவில் கலந்து கொண்டு விழா ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள், விழாக் குழுவினர், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து சிறப்பாக செய்தி ருந்தனர். பக்தர்கள் திரளாக பங்கேற்ற தால் கோவில் வளாகம் மற்றும் சுற்றுப் புற பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருந் தன

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad