திருநெல்வேலி, கங்கைகொண்டான் நம்ம ஊரு குளோபல் பள்ளியின் ஆண்டு விழா SYNAPSE 2026 பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளியின் நிறுவனர் டாக்டர் சண்முகப்பிரியா தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர் மாரி கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
ஆண்டு விழா நிகழ்ச்சியில்
சிறப்பு அழைப்பாளராக
தமிழக அரசின் இளைஞர் முன்னேற்றம் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளர் சந்திப் நந்தூரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
பள்ளியின் நிர்வாக குழு பிரதிநிதி சிதம்பரம் பள்ளியின் முதல்வர் பிரதீஷ் குமார், பள்ளியின் முன்னாள் முதல்வர் பத்மஸ்ரீ ராஜகோபாலன் மற்றும் பள்ளியின் மேலாளர் சார்லஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்டு நடைபெற்றது. ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக