தென்திருப்பேரை ஆகஸ்ட் 30. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் ஒன்பதாவதான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பவுத்திரோத்ஸவ கருடசேவை நடந்தது.
வைஷ்ணவ திவ்ய தேசங்களில் தினசரி நடைபெறுகின்ற பூஜைகளில் ஏற்படுகின்ற விடுதல்களுக்காக நடத்தப்படும் திருவிழா பவுத்திரோத்ஸவம் எனப்படும். கடந்த 25- ந்தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெறுகிறது.
இதில் ஐந்தாம் நாளான நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம் 8 மணிக்கு நித்தியல். 9 மணிக்கு ஹோமம் செய்து 11 மணிக்கு பூரணாகுதி நடந்தது. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் சேமிக்கப்பட்டு சாத்துமுறை கோஷ்டி தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு சாயரட்சை. 6 மணிக்கு உற்சவர் பொலிந்து நின்றபிரான் கருட வாகனத்திலும் நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் அலங்கரிக்கப்பட்டு 7.45 மணிக்கு காட்சி அளித்தார். மாடவீதி வலம் வந்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள். நிர்வாக அதிகாரி சதீஷ் ஆய்வாளர் நம்பி அறங்காவலர் குழுத் தலைவர் கணேசன் மற்றும் உறுப்பினர்கள் கள்ளப்பிரான் கோவிலில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக