தமிழ்நாடு அரசு கைத்தறி துறை சார்பாக 12 வது தேசிய கைத் தறி தினத்தை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம் !
குடியாத்தம் , ஆகஸ்ட் 11 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம். 12.வது
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று காலை . தரணம் பேட்டை யில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று.நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கைத் தறி துறை உதவி இயக்குனர் தமிழ்ச் செல்வன் தலைமை தாங்கினார் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வரு வாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன்
நகர மன்ற உறுப்பினர் அர்ச்சனா நவீன்
குடியாத்தம் தலைமை மாவட்ட அரசு மருத்து வமனை . மருத்துவ அலுவலர் மஞ்சு நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்து.விளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தனர் இதில் வ. விஜய குமார் கைத்தறி காவலன் எஸ் ரமேஷ் மற்றும் மருத்துவர்கள் ஷாலினி தாரணி பருவதர் ராஜ் கேஸ்வேலு கைத்தறி துறை அதிகாரிகள் ஜெகதீசன் ராஜா வெங்கடேசன் காவேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர் இந்நிகழ்ச்சியில் கைத்தறி நெசவாளர்கள் அவரைச் சார்ந்த குடும்பத் தினருக்கு நல்வாழ்வினை கருத்தில் கொண்டு கைத்தறி நெசவாளர்களை நோய்களிலிருந்துஇருந்து பாதுகாக்கவும் அவர்களுக்கு தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வருடாந்திர மருத் துவ பரிசோதனைகள் நடைபெற்றது.
இதில் எலும்பு மற்றும் மூட்டு வலி கண் பரிசோதனை சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனைகள் நுரையீரல் சம்பந்தமாக சிகிச்சை பெண்களுக்கு சிறப்பு மருத்துவம் ஆகியவற்றுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது இதில் 300-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பங்கேற்றனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக