ஜவ்வாது மலை காப்புக் காட்டில் அரிய வகை சருகுமானை வேட்டையாடிய இருவர் கைது 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் !
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட ஜவ்வாது மலை காப்புக்காடு பகுதியில் அரிய வகை சருகுமானை வேட்டையாடிய இரு வரை வனத்துறையினர் கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய இரண்டு நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
ஜவ்வாது மலை காப்பு வனப்பகுதியில் சமூக விரோதிகள் வன உயிரினங்களை சட்டவிரோதமாக வேட்டையாடி வருவதாக மாவட்ட வன அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்த ரவின்பேரில் வனச்சரக அலுவலர் சதீஷ் குமார் தலைமையில், வனவர் கிருஷ்ண மூர்த்தி, வனக்காவலர்கள் பொன்னுவேல் பாரதிதாசன், முருகன் மற்றும் காளிமுத்து ஆகியோர் கொண்ட குழுவினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, இருவர் நாட்டு துப்பாக்கி மூலம் அரிய வகை மான் இனமான சருகுமானை வேட்டையாடி கொண்டு வந்தது கண்டறியப்பட்டது. அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், கோவிந்தசாமி மகன் சங்கர் (வயது 55) மற்றும் சாமிநாதன் மகன் சங்கர் (வயது 37) என்பது தெரியவந்தது.இதையடுத்து இருவரையும் கைது செய்த வனத்துறை யினர், அவர்களிடம் இருந்த இரண்டு நாட்டு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் திருப் பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக