தூத்துக்குடி மறைமாவட்டம் திருச்செந்தூர் ஜீவாநகர் பங்கு தெற்கு பரமன்குறிச்சி சிங்கராயர்புரத்தில் புனித சூசையப்பர் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்திற்கு, வீரபாண்டியன்பட்டணம், அமலிநகர், ஆலந்தலை, பெரியதாழை உள்ளிட்ட கடலோர பங்குகளில் இருந்து, கிறிஸ்தவர்கள் ஏராளமானோர், புனித சூசையப்பரின் ஆசி பெறுவதற்காக, புதன்கிழமை தோறும் குடும்பத்தோடு வருகை புரிந்து பிரார்த்தனையில் ஈடுபட்டு, தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்த ஆலயவளாகத்தில் உள்ள நாமே அமல உற்பவ மாதா கெபியில், மாதந்தோறும் முதல்சனி மாலையில், சிறப்புதிருப்பலி நடைபெற்று வருகிறது. இம்மாதத்தின் முதல் சனி மற்றும் வாராந்திர ஞாயிற்றுக்கிழமை திருப்பலி, பங்குத்தந்தை ரோஷன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
இதில், "உணவை விரைவாக தருவதற்காக, நம்மீது பரிவு கொண்டு, அவரே பலிபீடமாகவும் பலியிடுபவராகவும் பலிபொருளாகவும்" என, பங்குத்தந்தை ரோஷன் அடிகளார் சிறப்பு கருத்த பகிர்வை வழங்கினார்.
இந்த திருப்பலியில், ஊர் பொதுமக்கள் உட்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மரியே வாழ்க என சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக