ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் தொடர்ந்து நடைப்பெற்று வருவதால் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் மல்லிப்பூ கிலோ 1000 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 600 ரூபாய்க்கும்,முல்லை கிலோ 600 ரூபாய்க்கு விற்பனை.
அதேபோன்று அரளிப்பூ ரூபாய் 300க்கும், சம்பங்கி ரூபாய் 200க்கும், என வண்ண வண்ண பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் தொடர்ந்து ஆடி மாத வழிபாடுகள் ஆலயங்களில் நடைப்பெற இருப்பதால் பூக்களின் விலை உயர் கூடும் என பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் .
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக