கன்னியாகுமரி அஞ்சுகிராமம் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருடிய வாலிபர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

கன்னியாகுமரி அஞ்சுகிராமம் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருடிய வாலிபர்.

கன்னியாகுமரி அஞ்சுகிராமம் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருடிய வாலிபர்.

கன்னியாகுமரி மாவட்டம்: அஞ்சுகிராமம் அருகே மயிலாடி சந்திப்பில் உள்ள சுடலைமாடசாமி கோவிலில் உண்டியலை உடைத்து ரூ.5 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. காலையில் கோவிலை திறந்த பூசாரி பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கோவில் தலைவர் நாகராஜன் அளித்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.விசாரணையில் அமராவதிவிளையைச் சேர்ந்த மரியசேவியர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad