வட்டார கல்வி அலுவலகம் எதிரே டிட்டோ ஜாக் அமைப்பின் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

வட்டார கல்வி அலுவலகம் எதிரே டிட்டோ ஜாக் அமைப்பின் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் !

வட்டார கல்வி அலுவலகம் எதிரே டிட்டோ ஜாக் அமைப்பின் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் !
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 22 -
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டார கல்வி அலுவலகம் எதிரே, டிட்டோ ஜாக் அமைப்பின் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொட்டும் கனமழையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆற்காடு வட்டார தலைவர் முகமது அமீன் மற்றும் ஆற்காடு நகர தலைவர் பிரியா ஆகியோர் தலை மை தாங்கினர். ஆற்காடு வட்டார செய லாளர் அ.உமாபதி அனைவரையும் வர வேற்க, மகேந்திரன் முன்னிலை வகித் தார் இந்த நிகழ்வில் மாநில ஒருங்கி ணைப்பாளரும் தமிழ்நாடு தொடக்க நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க நிறுவனத் தலைவருமான சி.சேகர் சிறப்புரையாற்றினார். மேலும் மாநில துணை பொதுச் செயலாளர் ஜெ. ஶ்ரீதர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சையத்சிரா ஜுதீன், மாநில தலைமை நிலைய செய லாளர் ரவீந்தரன், மாநில இணைச் செய லாளர் குமாரசாமி, மாவட்டத் தலைவர் ஜனார்த்தனம், மாவட்டப் பொருளாளர் சார்லஸ் ரூபன், மாநில மகளீரணி செய லாளர் மஞ்சுளா, மாவட்ட மகளீரணி துணைத் தலைவர்கள் வானதி, கலைச் செல்வி, மாவட்ட இணை செயலாளர் மாலதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கள் மோகனலட்சுமி, அம்ஜத்கான் மற்றும் ஆற்காடு நகரப் பொருளாளர் ஆனந்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு தேர்ச்சியில் 40 சதவீத மதிப்பெண் வழங்க வேண்டும், தர ஊதியம் பெற்றுவரும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு தணிக்கைத் தடையை நீக்கி தற்போது பெற்று வரும் ஊதியத்தையே தொடர்ந்து வழங்க வேண்டும், தமிழக உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக நடைமுறைப் படுத்த வேண்டும் மற்றும் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப் பட்டன.

மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad