தமிழ்நாடு குரோமேட்ஸ் & கெமிக்கல்ஸ் லிமிடெட் (TCCL) நிறுவன வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இடைக்கால சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு பணிகளை ஆய்வு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

தமிழ்நாடு குரோமேட்ஸ் & கெமிக்கல்ஸ் லிமிடெட் (TCCL) நிறுவன வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இடைக்கால சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு பணிகளை ஆய்வு !

தமிழ்நாடு குரோமேட்ஸ் & கெமிக்கல்ஸ் லிமிடெட் (TCCL) நிறுவன வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இடைக்கால சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு பணிகளை ஆய்வு  !
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 22 -
             ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியா ரவிச்சந்திரன் வாலா ஜா வட்டம், ராணிப்பேட்டை சிப்காட்
வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு குரோமேட்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் லிமிடெட் (TCCL) நிறுவன வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இடைக்கால சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
வாலாஜா வட்டம், ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு
குரோமேட்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் லிமிடெட் (TCCL) நிறுவன வளாகத்தில் பல ஆண்டுகளாக தேங்கியுள்ள குரோமி யம் கலந்த அபாயகரமான கழிவுகளை பாதுகாப்பாக மூடுதல், மழைநீர் மற்றும் கசிவுநீரை கட்டுப்படுத்தும் வகையில் வடிகால் அமைத்தல், மழைநீர் சேகரிப்பு குளம் அமைத்தல் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள பகுதியைச்சுற்றி புதிய சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட இடை க்கால மறுசீரமைப்பு பணிகள் நடை பெற்று வருகின்றன. இப்பணிகளுக்காக ரூ.19.35 கோடி மதிப்பில் ஒப்பந்தம்
வழங்கப்பட்டு, 21.02.2026 முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.இன்றைய ஆய்வின் போது, குரோமியம் கழிவுகளை சீரமைத்து குவித்தல், கழிவுக் குவியலை HDPE தாள்கள் மூலம் மூடும் பணி, ஜியோ-மெம்பிரேன் லைனர் அமைக்கும் பணி, மழைநீர் மற்றும் கசிவுநீர் சேகரிப்பிற் கான வடிகால் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளின் முன்னேற்றத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
மேற்கண்ட பணிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசுபடுவதைத் தடுக்கும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், நடைபெற்று வரும் அனைத்து மறுசீரமைப்பு பணிகளையும் விரைந்து முடிக்கும் வகையில் பணிகளை துரிதப் படுத்தி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு விற்குள் பணிகளை நிறைவு செய்ய
வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சம்பந் தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியை
மேற்கொண்டு வரும்நிறுவனத்தினருக்கு அறிவுறுத்தினார். மேலும், மறுசீரமைப்பு
பணிகளின் முன்னேற்றத்தை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து
கண்காணித்து, பணிகள் திட்டமிட்டபடி விரைந்து நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சி யர்  அறிவுறுத்தினார். முன்னதாக, முகுந் தராயபுரம் ஊராட்சி, நெல்லிக்குப்பம் கிராமத்தில் இயங்கி வரும் இண்டஸ்ட் ரியல் காம்ப்ளக்ஸ் பேஸ் – 3  நிப்பான் பெயிண்ட் (இந்தியா) பிரைவேட் நிறு வனத்தின் செயல்பாடுகள் குறித்தும் சால்வன்ட் (Solvent) இருப்பு வைப்பதற் காக உரிமத்தை புதுப்பிக்க கோரியது குறித்தும் மற்றும் ராணிப்பேட்டை நகரத் தில் இயங்கி வரும் கோரமண்டல் இன்டர் நேஷனல் லிமிடெட் (உரம் மற்றும் பயிர் பாதுகாப்பு பிரிவு) நிறுவனத்தின் செயல் பாடுகள் குறித்தும் சால்வன்ட் (Solvent) இருப்பு வைப்பதற்காக உரிமத்தை புதுப் பிக்க கோரியது குறித்தும் நேரில் பார் வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வு களில் மாவட்ட வழங்கல் அலுவலர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறி யாளர் விஜயகுமார், சிப்காட் திட்ட அலு வலர் கலைச்செல்வி, வாலாஜா வட்டாட் சியர் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .

ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad