வாலாஜாவில் ஸ்ரீதேவி முத்து நாகம்மன் கோவில் 30-ஆம் ஆண்டு திருவிழா சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 17 ஆகஸ்ட், 2026

வாலாஜாவில் ஸ்ரீதேவி முத்து நாகம்மன் கோவில் 30-ஆம் ஆண்டு திருவிழா சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு !

வாலாஜாவில் ஸ்ரீதேவி முத்து நாகம்மன் கோவில் 30-ஆம் ஆண்டு   திருவிழா சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு !
வாலாஜா , ஆகஸ்ட் 17 -
 ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அன்னை சத்யா நகரில் அமைந்துள்ள ஸ்ரீதேவி முத்து நாகம்மன், ஸ்ரீ மகா வீரர் முனீஸ்வரர் கோவிலில் 30-ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு  சிறப்பு அன்ன தானம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர், கழக கொள்கை பரப்பு இணைச் செயலாளர், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் S.M. சுகுமார் MLA கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
வாலாஜா நகர மன்ற உறுப்பினரும், நகர அம்மாபேரவைசெயலாளருமானGசுரேஷ்  M.C, முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் W.G. மோகன் Ex.M.C., முன்னாள் நகரச் செயலா ளர் D.ஜெயதேவன், அவைத் தலைவர் W.S.மணி, கவுன்சிலர் ரமேஷ் , சுரேஷ் குமார் ரத்ததான வள்ளல் குமரன் ரவி சங்கர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

 ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad