குடியாத்தம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி உறவினர்கள் சாலை மறியல் !
பேர்ணாம்பட்டு.ஆகஸ்ட் 17 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த. எம் வி குப்பம் மேல் முருங்கை கிராமத்தைச் சேர்ந்த முருகன்என்பவரின் மகன் வெங்கடேசன் (எ) புலிப் பாண்டி (வயது 25)திருமணம் ஆகாதவர் இவர்
அழிஞ்சி குப்பம் மின்சார வாரிய அலு வலகத்தில் கடந்த ஒரு மாத காலமாக தின கூலி ஒப்பந்த அடிப்படையில் தொழி லாளியாக வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் வெங்கடேசன் பிறந்த நாள் என்பதால் தனது வீட்டின் அருகில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப் படுகிறது. அதே பகுதியை சேர்ந்த பிரபா கரன் (வயது 39)என்பவர் . சட்டீஸ்கர் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை நக்சல் . தடுப்பு பிரிவில் அவிழ்தராத பணிபுரிந்து வருகிறார். இவர் விடுமுறை யில் தனது வீட்டுக்கு வந்திருந்தார் அப்போது அவர் வீட்டில் மின்விளக்குகள் எரியாததால் சரிபார்க்கும் படி வெங்கடேச னிடம் கூறியுள்ளார் இதனை அடுத்து வெங்கடேசன் அங்கிருந்த ட்ரான்ஸ் பார்மரில் மின்சாரத்தை ஆப் செய்து விட்டு மின் கம்பத்திலிருந்துசரி பார்த்துக் கொண்டிருந்தார் .அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்று கொண்டிருந்த உயர். அழத்த மின்சார கம்பியில் தலை உரசியதால் அவர் மீது மின்சாரம் தாக்கி யது உடனடியாக அவரை அருகில் இருந் தவர்கள் மீட்டு மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர் அங்குசிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
இது குறித்து வெங்கடேசனின் தந்தை முருகன் கொடுத்த புகாரின் பேரில் மேல்பட்டி உதவி ஆய்வாளர் முருகவேல் மற்றும் போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கடேசன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனது ஒரே மகன் சாவுக்கு அவிழ்தார் பிரபாகரன் தான் காரணம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி வெங்கடேசன் உடனே வா ங்க மறுத்து எம்பி குப்பம் கோவில் மேடு பகுதியில் மேல் பட்டி ஆம்பூர் சாலை யில் நேற்று பிற்பகல் ஒன்றரை மணி நேரம் சாலை மறியல் ஈடுபட்டனர் இதனால் மேல்பட்டி ஆம்பூர் சாலையில் போக்குவர த்து பாதிக்கப்பட்டது இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது தகவல் அறிந்த வுடன் குடியாத்தம் துணை காவல் கண் காணிப்பாளர் சுரேஷ். வேற நம்பர் காவல் ஆய்வாளர் பிரபு. குடியாத்தம் காவல் ஆய் வாளர் சிவகுமார். மற்றும் கே வி குப்பம் மேல்பட்டி போலீசார் பேரணாம்பட்டு போலீசார். விரைந்து சென்று போக்கு வரத்து சீர் செய்து இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக