நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தில் 80-வது சுதந்திர தின விழா ஒன்றிய குழு தலைவர் பங்கேற்பு !
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 15 -
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், இந்திய திருநாட்டின் 80வது சுதந்திர தின விழா, ஒன்றிய குழு தலைவர் வடிவேலு அவர்கள் தலைமையில் கொண்டாடப் பட்டது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்யா, சுமதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள் அவர்களின் திருவுருவ சிலைக்கும், படத்திற்கும் மலர்மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
பின்னர் ஒன்றியக் குழு தலைவர் வடிவேலு அவர்கள், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில், நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர் .
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக