நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் நெமிலி பேரூர் தி.மு.க சார்பில் முத்தமிழ றிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு!!
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 9 -
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் பேரூர் தி.மு.கழகம் சார்பில், முன்னாள் முதல மைச்சர் முத்தமிழறிஞர், டாக்டர்.கலைஞர் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும் நெமிலி ஒன்றிய பெருந்தலைருமான பெ.வடிவேலு தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, நெமிலி பேரூர் கழக செயலாளர். ஜனார் த்தனன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாகி கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொது மக்கள், நெமிலி அண்ணா சாலையில் அமைதி ஊர்வலமாகச் சென்று, நெமிலி பேருந்து நிலையத்தில் உள்ள, பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, பின்னர் அலங்கரி த்து வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர், டாக்டர்.கலைஞர் அவர்களின் திருவுரு வப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர்தூவி, மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து நிர்வாகிகள் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர். சரவணன், வழக்கறி ஞர். கார்த்திகேயன், பொதுக்குழு உறுப் பினர். அப்துல் நசீர், ஒன்றிய அவைத் தலைவர். புருஷோத்தமன், துணை செய லாளர்கள். முகமது அப்துல் ரகுமான், பாண்டியன் , சுரேஷ்குமார், அவைத் தலைவர் சேகர், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர். எம்.பி.பாபு, நிர் வாகிகள். வக்கீல் வெங்கடேசன், ரோஷன் பாலு, சுரேஷ், தமிழ்ச்செல்வன், ஒன்றிய நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர் கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக