முரசொலி மாறன் 93- வது பிறந்தநாள் விழா நெமிலி ஒன்றிய பெருந் தலைவர் பெ.வடிவேலு பங்கேற்பு !
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 17 -
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக மற்றும் நெமிலி பேரூர் திமுக சார்பில்இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளர், தமிழ் வளர்த்த "முர சொலி" எனும் முதுபெரும் நாளேட்டின் ஆசிரியர், இளம் பிராயம் தொட்டு பொதுப்பணியில் ஆர்வம் கொண்டு, அயராது பொதுத் தொண்டாற்றியவர்.
தனது 35 ஆண்டு காலத்திற்கும் மேலாக, நாடாளுமன்றத்தில் ஜனநாயக முறை களை பழுதர உணர்ந்து பேணிய பண் பாளர், பொருளாதாரம், தொழில் மற்றும் வர்த்தக கொள்கைகளை சீர்திருத்தி அலசி ஆராய்ந்து பேரறிவு படைக்கப் பெற்றவர். இலக்கியத் துறையின் இன் பத்தமிழ் காவியங்களை ஏராளம் படைத் தவர், "உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம்" எனும் கழகத்தின் தூய்மையான கொள்கையை கொண்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றில் தனக்கென தனி இடம் பதித்த தகைமையாளர். முத்தமிழறி ஞர், டாக்டர்.கலைஞர் அவர்களின் மன சாட்சியாக விளங்கிய, முரசொலி மாறன் அவர்களின் 93-வது பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும் நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான
பெ.வடிவேலு தலைமையில் நடைபெற்ற, இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர். சரவணன், ஒன்றிய அவைத்தலைவர். புருஷோத்தமன், துணைச் செயலாளர். முகமது அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.
இந்த நிகழ்ச்சியின் போது, முரசொலி மாறன் அவர்களின் படத்திற்கு கழக நிர் வாகிகளும், உடன்பிறப்புகளும் மலர் மாலை அணிவித்து, மலர்தூவி மரியா தை செலுத்தினர். பின்னர் பொதுமக்களு க்கு இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சி யில், நிர்வாகிகள் சேகர், பசுபதி, எம்.பி .பாபு, ஒன்றிய கவுன்சிலர்கள், கிருஷ்ண வேணி வெங்கடேசன், சுரேஷ், குமார், வரலட்சுமி அசோக் குமார், சரஸ்வதி பார்த்திபன் மற்றும் கழகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக