குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி, சார்பில் போதை பொருள் எதிர்ப்பு போதை இல்லா தமிழ்நாடு மாணவர் பேரணி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 10 ஆகஸ்ட், 2026

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி, சார்பில் போதை பொருள் எதிர்ப்பு போதை இல்லா தமிழ்நாடு மாணவர் பேரணி !

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி,  சார்பில் போதை பொருள் எதிர்ப்பு போதை இல்லா தமிழ்நாடு மாணவர் பேரணி !
குடியாத்தம் , ஆகஸ்ட் 10 -
வேலூர் மாவட்டம் குடியேற்றம், அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியின் போதை பொருள் எதிர்ப்பு மன்றத்தின் சார்பில் “போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு” என்ற முழக்கத்தினை முன்னிறுத்தி 10.08.2026 (திங்கட்கிழமை) அன்று மாண வர்களின் பேரணி நடைபெற்றது. பேரணி யில் 300-க்கும் மேற்பட்ட மாணாக்கர் கலந்து கொண்டனர். 
காந்தி நகர் முதல் Post Office வரையிலும் 300 மாணாக்கர் கலந்து கொண்ட மனிதச் சங்கிலியும் நடைபெற்றது. மேலும், மாண வர்களுக்கு ஓவியம், வினாடி-வினா, கட்டுரை மற்றும் சுவரொட்டி விளக்கக் காட்சி போட்டிகள் நடைபெற்றன. அனைத் துத் துறை மாணாக்கரும் போட்டியில் பங்குப் பெற்ற னர். கல்லூரியின் முதல் வர் முனைவர் பெ. சீனுவாச குமரன் அவர்கள் போட்டி களைத் தொடங்கி வைத்தும் பேரணியில் கலந்துகொண்டும் மாணவர்களை வாழ்த் தினார். மேலும், இதில் கணிதத்துறை தலைவர் முனை வர் செ. கருணாநிதி, இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் ஆ. தாமரை, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனை வர் M. கல்பனா, முனைவர் K. அருளானந் தம் மற்றும் காவல்துறை  உதவி ஆய்வா ளர் (SI) தரணி பர்வதம் மற்றும் பேராசி ரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad