கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே காதல் வலையில் வீழ்த்தி பெண்கள் மற்றும் மாணவிகளிடம் நகை, பணத்தை மோசடி செய்த ஜெனிஷ் என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தனர்.
விசாரணையில், இவர் அபகரித்த நகைகளை விற்று ஆம்னி பஸ் மற்றும் 2 கார்களை வாங்கி வாடகைக்கு விட்டு வந்தது தெரியவந்தது.
தமிழக குரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட.நிருபர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக