மோர்தானா அணை கால் வாய்களை தூர் வாராமல் திறந்ததை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 ஆகஸ்ட், 2026

மோர்தானா அணை கால் வாய்களை தூர் வாராமல் திறந்ததை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் !

மோர்தானா அணை  கால் வாய்களை தூர் வாராமல் திறந்ததை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் !
குடியாத்தம் ,ஆக.25 - 
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி மோர்தானா அணையின் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்காமல் அணையில் இருந்து தண்ணீர் திறந்ததாக கூறி தமிழக அரசை கண்டித்து, குடியாத்தம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொண்டசமுத்திரம் ஊராட்சி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் மோர்தானா கால்வாய் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு குடியாத்தம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றிய பெருந்தலை வரு மான என்.இ. சத்யானந்தம் தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் மாநில திமுக மகளிரணி பிரச்சாரக் குழு செயலாளரும், முன்னாள் குடியாத்தம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான அமுலு விஜயன், குடியாத்தம் நகர மன்ற தலைவரும், நகர திமுக செயலாளருமான எஸ். சௌந்தர ராஜன், மாவட்ட கழக துணை செயலாள ரும், நகர மன்ற உறுப்பினருமான ஜி.எஸ். அரசு, திமுக தலைமை கழக பேச்சாளர் குடியாத்தம் குமரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மேலும் கே.வி.குப்பம் தொகுதி ஒன்றிய கழக செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான ரவிச்சந் திரன், கே.வி.குப்பம் ஒன்றிய கழக செய லாளர் மற்றும் முன்னாள் பெருந்தலைவர் கே. சீதாராமன், ஜெயா முருகேசன், மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைச் செயலாளர் சி. கோபி, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கே. தயாளமூர்த்தி, சக்திதாசன், வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் கே. சேகர், மாவட்ட இளைஞரணி துணை அமைப் பாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் அரிகிருஷ்ணன், நகர கழக துணை செயலாளர் மற்றும் நகர மன்ற உறுப்பினர் ம மனோஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெயபிரகாஷ், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ஜீவா ரவி, பாண்டியன் நகர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் என 500-க்கும் மேற் பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில்,மோர்தானா அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்களை முழுமையாக தூர்வாரி சீரமைக்க வேண்டும் என வலி யுறுத்தப்பட்டது. கால்வாய்களில் உள்ள மண், புதர்கள் மற்றும் ஆக்கிரமிப்பு களை அகற்றி, தண்ணீர் தடையின்றி விவசாய நிலங்களுக்கு சென்றடைய உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது . கால்வாய் களை தூர்வாராமல் அணையில் இருந்து தண்ணீர் திறந்த தமிழக அரசை கண்டி த்து திமுகவினர் கோஷங்களை எழுப்பி னர். ஆர்ப்பாட்டத்தையொட்டி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad