மோர்தானா அணையில் இருந்து தண்ணீர் விவசாய பாசனம், குடிநீர் தேவைக்காக மாவட்ட ஆட்சியர் திறப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 ஆகஸ்ட், 2026

மோர்தானா அணையில் இருந்து தண்ணீர் விவசாய பாசனம், குடிநீர் தேவைக்காக மாவட்ட ஆட்சியர் திறப்பு!

மோர்தானா அணையில் இருந்து தண்ணீர் விவசாய பாசனம், குடிநீர் தேவைக்காக மாவட்ட ஆட்சியர் திறப்பு!
 குடியாத்தம்,ஆகஸ்ட் 24 -
 வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், மோர்தானா கிராமத்தில் கௌண்டன்யா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மோர் தானா அணையில் இருந்து விவசாய பாசனம், குடிநீர் தேவையை பூர்த்தி செய்தல் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் தண்ணீர் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.எஸ். லீலா அலெக்ஸ் இ.ஆ.ப., கலந்து கொண்டு மோர்தானா அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். அணையில் இருந்து தண்ணீர் திறக்கப் பட்டதின் மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைப்பதுடன், குடிநீர் தேவைக்கும் திபயன்படும் என அதிகாரிகள் தெரிவித் தனர். மேலும், அணையில் இருந்து தண்ணீர் திறப்பதின் மூலம் நீர்நிலைகள் மற்றும் கிணறுகளில் நீர்வரத்து அதிகரி த்து, நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் மோர்தானா அணையை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது.தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி யின்போது நீர்வளத்துறை செயற்பொறி யாளர் சோபானா, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் கோபி, வட்டாட்சியர் பிரியா, குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா, மோர் தானா ஊராட்சி மன்ற தலைவர் பரந் தாமன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
மோர்தானா அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பாசன வசதியை எதிர்பார்த்து காத்திருந்த விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையில் இருந்து திறக்கப்படும் தண் ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன் படுத்தி பயன்பெற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad