சீவூர் தலகாசமேடு இரட்டை முனீஸ்வரர் திருவிழா பக்தர்களுக்கு பிரியாணி விருந்து ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 ஆகஸ்ட், 2026

சீவூர் தலகாசமேடு இரட்டை முனீஸ்வரர் திருவிழா பக்தர்களுக்கு பிரியாணி விருந்து !

சீவூர் தலகாசமேடு இரட்டை முனீஸ்வரர் திருவிழா  பக்தர்களுக்கு பிரியாணி விருந்து !
குடியாத்தம், ஆக.24: 
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சீவூர் அருகே தலகாசமேடு பகுதியில் கவுண்டன்யா மகாநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ இரட்டை முனீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத திருவிழா சிறப் பாக நடைபெற்றது.திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர் களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக் தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி யை வழிபட்டனர். மேலும், பக்தர்கள் தங்க ளது நேர்த்திக்கடனை செலுத்தும் வகை யில் ஆடு, கோழி உள்ளிட்டவற்றை பலி யிட்டு வழிபாடு செய்தனர்.திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்களுக்கு பிரி யாணி விருந்து வழங்கப்பட்டது. இதில் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதி களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்து பிரசாதம் மற்றும் விருந்தில் பங்கேற்றனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை சீவூர் துரைசாமி, அசோகன் மோகன் உள்ளிட்ட விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். திருவிழாவையொட்டி ஆலயப் பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad