குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்து ள்ள அத்தி மருத்துவனையில் கட்டி முடிக்கப்பட்ட அறுவை சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை ஆரம்ப பூஜை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்து ள்ள அத்தி மருத்துவனையில் கட்டி முடிக்கப்பட்ட அறுவை சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை ஆரம்ப பூஜை !

குடியாத்தம் காக்கா தோப்பில்  அமைந்து ள்ள   அத்தி மருத்துவனையில் கட்டி முடிக்கப்பட்ட அறுவை சிகிச்சை  மற்றும் அவசர சிகிச்சை ஆரம்ப பூஜை !
குடியாத்தம், ஆகஸ்ட் 4 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி மருத்துவ மனையின் தலைமை மருத்துவரும் மற்றும் சிறுநீரகவியல் நிபுணருமான டாக்டர் பெ சௌந்தரராஜன் அவர்கள் தலைமை தாங்கி ஏழை மக்களுக்கு  குறைந்த செலவில் தமிழ்நாடு உறுப்பு  மாற்று   சட்ட விதிகளுக்கு உட்பட்டு  சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்படும் எனவும்  மேலும் குறைந்த செலவில் தரமான சிகிச்சை அளிக்கப் படும் என்றும் அவசர சிகிச்சை மையம்    24 /7 மணிநேரமும் செயல்பட ஏற்பாடு செய்யப்படும் எனவும்   தெரிவித்தார் . 
 இதில் சிறப்பு விருந்தினராக விருந்தி னராக கலந்துகொண்ட முன்னாள் ஆளு நர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பெரும் நகரங்களில் உள்ள நவீன  அறுவை சிகிச்சை மையம்  போல்  காக்கா தோப்பு கிராமத்திலும்  அதிநவீன  அறுவை சிகிச்சை மையம்  மற்றும் 24/7 அவசர சிகிச்சை மையம் அத்தி மருத்து வமனையிலும் துவக்கபட்டது மேலும் அனைத்து விதமான அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் மற்றும்   வளர்ச்சி அடை யவும் வாழ்த்துத்தெரிவித்தார் அத்தி மருத்துவமனையின் கிளை தலைமை மருத்துவர் டாக்டர் ஆ கென்னடி குடியாத் தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கே குமரவேல் , அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் மகேஷ் ராஜாமணி , அத்தி  செவி லியர் கல்லூரி முதல்வர் பால்ராஜ் சீனித் துரை மற்றும்   அத்தி மருத்துவனையின் நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் மருத்து வர்கள் மற்றும்  செவிலியர்கள் கலந்துக் கொண்டனர் . அத்தி கல்விக் குழுமத்தின் அறங்காவலர் டாக்டர் சௌ சுகநாதன் அவர்கள் நிகழ்ச்சியினை  ஒருங்கி ணைந்து  நன்றி தெரிவித்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad