ரோட்டரி சங்கம், ஜெம் மருத்துவமனை மற்றும் பாலாஜி அபிநயா பல் மருத்துவ மனை இணைந்து இலவச குடலிறக்கம் நோய்களுக்கான மருத்துவ முகாம் !
குடியாத்தம் , ஆகஸ்ட் 9 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்கம், ஜெம் மருத்துவமனை மற்றும் பாலாஜி அபிநயா பல் மருத்துவமனை இணைந்து இலவச குடலிறக்கம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்கத் தலைவர் Rtn.T.S.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார், சிறப்பு அழைப்பாளர்களாக கே வி குப்பம் சட்ட மன்ற உறுப்பினர் E.தென்றல் குமார், கே எம் ஜி கல்வி நிறு வனங்களில் செயலாளர் Rtn.K.M.G. ராஜேந்திரன், ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுநர் Rtn.J.K.N.பழனி, வழக்கறிஞர் Rtn.K.M.பூபதி ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தனர் முகாமில் 115 நபர்களுக்கு பரிசோதனை செய்யப் பட்டு அவர்களில் 30 பேர் மேல் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர், மருத்துவ முகாம் இயக்குனர் Rtn.P.L.N. பாபு , பொருளாளர் Rtn.Dr.V.பாலாஜி ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்த னர், இந்நிகழ்வில் முன்னாள் தலைவர் கள்Rtn.C.K.வெங்கடேசன்,Rtn.C.கண்ணன் முன்னாள் செயலாளர்கள் Rtn.R.பாலமுரு கன், Rtn.K.சுரேஷ், சங்க உறுப்பினர்கள் Rtn.ஜம்புலிங்கம், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் செயலாளர் Rtn.J.தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக