மாசுபடா அம்மன் ஆறாம் வெள்ளி விழா ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

மாசுபடா அம்மன் ஆறாம் வெள்ளி விழா ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் !

மாசுபடா அம்மன் ஆறாம் வெள்ளி விழா ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் !
குடியாத்தம், ஆகஸ்ட் 22 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ மாசுபடா அம்மன் கோயில் ஆறாம் வெள்ளி திருவிழாவையொட்டி, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.குடியாத்தம் நகர திமுக அமைப்பாளர் ஆரி. பாண்டியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியாத்தம் நகர மன்றத் தலைவரும், நகர திமுக செயலாளருமான எஸ். சௌந் தரராசன் கலந்து கொண்டு அன்னதானத் தை தொடங்கி வைத்தார். இதில் ஆயிரத் துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் ஆட்டோ மோகன், கவிதா பாபு, நகர துணைச் செயலாளர் ந. ஜம்புலிங்கம், மாவட்ட பிரதிநிதி கே. தண்டபாணி, மாவட்ட துணை அமைப்பாளர் எம். முத்து, என். விஜயகுமார், நகர அணி அமைப் பாளர்கள் ஆர்.ஜி. மாதவன், எஸ். சத்தியா, ஆட்டோ கஜேந்திரன், மு. அறிவழகன், பங்கடை முருகேசன், ஆட்டோ சீனி, டைலர் புகழேந்தி, ஆர். கிரிதர், கோடீஸ்வரன், புனிதன், சேகர், பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad