தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் சுமை தூக்கும்தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் சுமை தூக்கும்தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் !

 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் சுமை தூக்கும்தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் !
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 21 -
         ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை அணைக்கட்டு ரோடு பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழ கம் வட்ட செயல்முறை கிடங்கு இயங்கி வருகிறது இந்த கிடங்கில் இருந்து வாலா ஜா, சோளிங்கர், ஆற்காடு, நெமிலி ஆகிய பகுதிகளில் இயங்கும் ரேஷன் கடைகளு க்கு இந்த கிடங்கில் இருந்து ரேஷன் பொருட்கள்  லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது இந்தநிலையில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு முழுவதும் 30 மாவட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் அதன்படி வாலாஜா பேட்டை பகுதியில் இயங்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக வட்ட செயல்முறை கிடங்கில் 30 சுமை தூக்கும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதில் சங்க அங்கீகார தேர்தலை உடனே நடத்த வேண்டும் அதேபோல் வருகை பதிவேட்டில் பெயர் சேர்க்காமல் குழும கூட்டத்தில் பதிவு செய்தும் இதுவரையில் நடவடிக்கை இல்லாததால் பெயர் இல்லா மல் சுமை தூக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் பெயர்களை உடனே சேர்க்க வேண்டும், நிலுவையில் உள்ள 60% கூலி உயர்வு உடனடியாக முன் தேதியிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டனர் மேலும் நடைபெற்ற சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பல்வேறு ரேஷன் கடைகளுக்கு பொருட்களை ஏற்றிச் செல் லும் லாரிகள் கிடங்கில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

  மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad