குடியாத்தம் போக்குவரத்து கழக கிளை மேலாளர் இடம் கோரிக்கை மனு !
குடியாத்தம். ஆகஸ்ட் 26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளரை சந்தித்து தடம் எண் G-17B பேருந்து காலை 9.00 மணிக்கு பள்ளிக்குப்பம் வழியாக குடியாத்தம் வருவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாத சூழலில் கடந்த மூன்று மாதங்களாக மாணவர்கள் தண்டனைக்கு உள்ளாகும் நிலை உள்ளது. இது குறித்து கிளை மேலாளரி டம் பேசி காலை 8.00 மணியளவில் பள்ளிக்குப்பத்திலிருந்து குடியாத்தத்தி ற்கு இயக்கி உதவிட கோரியும், இதற்கு முன்பாகவே போராட்டத்தின்போது சமரச அடிப்படையில் மாலை 4.30 மணிக்கு குடியாத்தத்திலிருந்து புறப்பட்டு பள்ளிக் குப்பம் வரை இயக்கப்பட்டு வரும் தடம் எண் 82* பேருந்து மாணவர்கள் பேருந்து நிலையம் வருவதற்கு முன் புறப்பட்டு செல்வதால், மாணவர்கள் பேருந்தில் குறித்த நேரத்தில் பயணிக்க இயலாமல் காத்திருக்கும் நிலை உள்ளது. தடம் எண் 82 பேருந்தினை மாலை 5.00 மணியள வில் இயக்கிடவும், கிளை மேலாளரிடம் கோரிக்கை மனு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் வே. குமார் தலைமையில் ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் மனு அளிக்கப் பட்டது. .
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக