அத்தி கல்விக் குழுமம் மற்றும் ரோட்டரி சங்கமும் இணைந்து சுதந்திர தியாகி போற்றும் விதமாகவும் பேரணி !
குடியாத்தம், ஆகஸ்ட் 15 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்கா தோப்பு பகுதியில் உள்ள அத்தி மருத்துவ மனையின் தலைமை மருத்துவரும் அத்தி கல்விக் குழுமத்தின் தலைவருமான டாக்டர் பெ சௌந்தரராஜன் அவர்கள் தலைமை தாங்கினார் குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் அவர்கள் பேரணியை கொடி அசைத்து துவக்கி மாணவர்களுடன் காந்தி சிலை வரை நடைப்பயணம் மேற்கொண்டு நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பித்தார் பின்னர் குடியாத்தம் சட்ட மன்ற உறுப்பினர் அ சிந்து அவர்கள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மாணவர்களுடன் தியாகிகளின் நினைவு களையும் தியாகங்களையும் என்றும் மனதில் வைத்து அவர்களை போல் சேவை மனப்பான்மையோடு செயாலா ற்றவேண்டும் என கேட்டுக் கொண்டார்
மேலும் முன்னாள் ரோட்டரி சங்க தலை வர் ஜவரிலால் ஜெயின் அவர்கள் உடன் இருந்தார் .இதில் ரோட்டரி சங்கதலைவர் டி எஸ் ரவிச்சந்திரன் , செயலாளர் ஜே .தமிழ்செல்வன் , பொருளாளர் வி பாலாஜி ,இயக்குநர் செ கு வெங்கடேசன் மற்றும் முன்னாள் தலைவர்கள் சி. கண் ணன் ஆர்.அன்பு, வி என் அண்ணாமலை ஆர் வி .ஹரி கிருஷ்ணன், பி .சம்பத்
குமார் மற்றும் எ ஜே எ கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட னர் மேலும் காட்பாடி ரோட்டரி சங்க தலைவர் பி அழகப்பன் பேரணியில் கலந்துக்கொண்டு சிறப்பித்தார் . மை பாரத் அலுவலக உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர் . அத்தி கல்லூரி வளாகத் தில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட ஜவரிலால் ஜெயின் அவர்கள் கொடியேற்றி வைத்து மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி அடைந்து வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார் இந்நிகழ்ச்சியில் அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ மாணவி சிலம்பாட்டம் மற்றும் சுதந்திர தியாகிகளின் சிறப்பு உரை ஆற்றினார்கள்.குடியாத்தம் பாலி டெக்னிக் கல்லூரி முதல்வர் கே குமர வேல் , அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் பால்ராஜ் சீனித்துரை ,அத்தி மருத்துவமனையின் கிளை தலைமை மருத்துவர் டாக்டர் ஆ கென்னடி அவர்கள் , அத்தி மருத்துவமனையின் நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் மருத்துவர்கள் , பேராசிரியர்கள் அலு வலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர் .இப்பேரணியில் சுமார் 500 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துக் கொண்ட னர். அத்தி கல்விக் குழுமத்தின் அறங் காவலர் சௌ சுகநாதன் அவர்கள் பேரணியை ஒருங்கிணைத்தார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக