காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாதிய ரீதியாக அவமதித்த பாஜக சங்பரிவார் அமைப்பு களை கண்டித்து கண்டன ஆர்ப்பாடம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 15 ஆகஸ்ட், 2026

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாதிய ரீதியாக அவமதித்த பாஜக சங்பரிவார் அமைப்பு களை கண்டித்து கண்டன ஆர்ப்பாடம் !

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே  சாதிய ரீதியாக அவமதித்த பாஜக சங்பரிவார் அமைப்பு களை கண்டித்து கண்டன ஆர்ப்பாடம் !
குடியாத்தம் , ஆகஸ்ட் 15 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறி வுறுத்தலுக்கிணங்க காங்கிரஸ்கட்சியின் தேசிய தலைவர் மல்லி கார்ஜுன கார்கே அவர்களை சாதிய ரீதியாக அவமதித்த பாஜக சங்பரிவார் அமைப்புகளை கண்டி த்து வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று (14.08.2026) வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் குடியாத்தம் அம்பேத்கர் சிலை எதிரில் சத்தியாகிரக கண்டன ஆர்ப்பாடம் நடை பெற்றது பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளால் தொடர்ந்து அவமதிக்க படும்இந்திய அரசியலமைப்பு புத்தக முகப்புரையையும், தீண்டாமையை எதிர் த்து தன் வாழ்நாள் முழுவதும் போராடிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின்  திருவுருவ சிலையையும் பாலாபிஷேகம் செய்யும் நிகழ்வும் நடைப்பெற்றது.
நிகழ்விற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.சுரேஷ்குமார் தலைமை தாங் கினார். மாவட்ட நிர்வாகிகள் இலியாஸ் பாஷா, விஜயேந்திரன், தேவகிராணி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் குடியாத்தம் (மேற்கு) நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர். நவீன் பிரபு வரவேற்புரை ஆற்றினார். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் NMD.விக்ரம் மாலை அணிவித்தார். நிகழ்வில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ஜோதி கணேசன், செல்வக்குமார், ஜெகந்நாத ரெட்டி, தனசேகரன், ஆரோன், வேலூர் மண்டல தலைவர் அரியூர் சோமு, பள்ளி கொண்டா பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிக்கந்தர், மாவட்ட நிர்வாகிகள் காமராஜ், குபேந்திரன், அன்பரசி, உஷா ராணி,  செந்தில், உவைஸ் அஹ்மத், சரத் சந்தர், சத்தியமூர்த்தி, உதயகுமார், ஸ்டா லின், மாசிலாமணி மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் திருமதி. கோமதி குமரேசன்,  மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் அன்பரசன், மாவட்ட ஓபிசி பிரிவு தலைவர் ராகேஷ், மாவட்ட RGPRS தலைவர் ஆனந்தவேல், மாவட்ட மனித உரிமைப் பிரிவு தலைவர் யுவராஜ், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் ஆம்பு லன்ஸ் ராஜேஷ், மாவட்ட நெசவாளர் பிரிவு தலைவர் ஜெயவேல், மாநில எஸ்ஸி பிரிவு பொதுச் செயலாளர் சுப்பிர மணி, மாநில ஓபிசி பிரிவு துணைத் தலைவர் ஜலேந்திரன், முன்னாள் வட்டார தலைவர் லோகிதாஸ், ரங்கநாதன் ரஜினி காந்த், பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் நிகழ்வின் முடிவில்  பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளால் தொ டர்ந்து அவமதிக்கபடும் இந்திய அரசியல மைப்பு சட்ட புத்தக முகப்புரையையும், தீண்டாமையை எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் போராடிய புரட்சியாளர் அம் பேத்கர் அவர்களின்  திருவுருவ சிலை யையும் பாலால் அபிஷேகம் செய்து சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் குடியாத்தம் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீராங்கன் நன்றியுரை கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தார் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad