நாய் குறுக்கே வந்ததால் தேசிய நெடுஞ் சாலையில் கார் கவிழ்ந்து விபத்து இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

நாய் குறுக்கே வந்ததால் தேசிய நெடுஞ் சாலையில் கார் கவிழ்ந்து விபத்து இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

நாய் குறுக்கே வந்ததால் தேசிய நெடுஞ் சாலையில் கார் கவிழ்ந்து விபத்து இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் 
ராணிப்பேட்டை, ஆகஸ்ட் 21 -
          ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் நாய் குறுக்கே வந்த தால் தேசிய நெடுஞ்சாலையில் தலைக் குப்புற கவிழ்ந்து விபத்து இருவர் அதிர் ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
ராணிப்பேட்டை மாவட்டம் சென்னையில் இருந்து பெங்களூருவில் நடந்த நிகழ்ச் சிக்காக நேற்று மதியம் காரில் சென்ற இருவர், நிகழ்ச்சி முடிந்த பின்னர் இன்று காலை பெங்களூர் இருந்து சென்னை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர் அப் போது ரத்தினகிரி அடுத்த நந்தியாலம் பகுதியில் திடீரென தேசிய நெடுஞ் சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது, அதிவேகமாக வந்த நாய் குறுக்கே வந்ததால் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது மேலும் எதிர் பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி கார் தலைகீழாக கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டதுஇந்த விபத்தில் காரில் பயணம் செய்த கதிர் (வயது 32), ஆண்ட்ரோ (வயது 24) ஆகிய இருவரும்  அதிர்ஷ்டவ சமாக சிறிது காயத்துடன் உயிர் தப்பினர் இதையடுத்து விபத்து சம்பவம் குறித்து ரத்தினகிரி போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளாய் தலைக்குப்புற கவிந்த காரை பொது மக்கள் உதவியுடன் அப்புறப்படுத்தி  விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த விபத்து காரணமாக ரத்தினகிரி சென் னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை யில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad