அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி யில். கலந்தாய்வுக் கூட்டம்!
குடியாத்தம் , ஆகஸ்ட் 7 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின் வழி காட்டுதலின்படி, குடியேற்றம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை (M.A., M.Com., M.Sc.,) மாணவர் சேர்க்கை 10.08.2026 அன்று சிறப்புப் பிரிவினருக் கான கலந்தாய்வும், 13.08.2026 அன்று பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது. முதுநிலைமாணவர் சேர்க்கைக்காக இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் இக்கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இக்கல்லூரியில் M.A. – (தமிழ், ஆங்கிலம், பொருளியல், வரலாறு), M.Com. - வணிகவியல், M.Sc. – (தாவரவியல், கணிதம், வேதியியல், இயற்பியல், கணினி அறிவியல்) ஆகிய முதுநிலை பாடப்பரிவுகள் உள்ளன. இக்கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் காலை 09.30 மணிக்கு கல்லூரிக்கு வர வேண்டும். என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
தேவையான ஆவணங்கள்:-
1. இணைய வழியில் பதிவு செய்த விண்ணப்ப படிவம்,
2. மாற்றுச்சான்றிதழ் அசல் மற்றும் நகல்,
3. இளநிலை (UG) மதிப்பெண் சான்றிதழ் அசல் மற்றும் நகல்,
4. Provisional Certificate அசல் மற்றும் நகல்,
5. ஆதார் அட்டை,
6. சாதி சான்றிதழ்,
7. கடவுச்சீட்டு அளவு புகைப்படம்-2 மற்றும்
8. வங்கி புத்தக நகல் (Bank Pass Book Xerox)
மேற்குறிப்பிட்ட ஆவணங்களை கலந்தாய்வில் பங்குபெறும் மாணவர்கள் அவசியம் கொண்டு வருதல் வேண்டும். இக்கலந்தாய்வு அரசின் வழிகாட்டுதலின்படி, இடஒதுக்கீட்டின் மூலம் பின்பற்றி முறையாக நடைபெறும் என தெரிவிக்கலாகிறது. என கல்லூரி முதல்வர் சீனிவாசன் குமரன் தெரிவித்தார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக