தமிழ்நாடு முதலமைச்சர்.C.ஜோசப் விஜய் -க்கு ஆர்.எஸ்.ராஜன் பாராட்டு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

தமிழ்நாடு முதலமைச்சர்.C.ஜோசப் விஜய் -க்கு ஆர்.எஸ்.ராஜன் பாராட்டு.

தமிழ்நாடு முதலமைச்சர்.
C.ஜோசப் விஜய் -க்கு ஆர்.எஸ்.ராஜன் பாராட்டு.

கடந்த 12 ஆண்டுகளில் 5 முதலமைச்சர்களை தமிழ்நாடு மக்கள் பார்த்து இருக்கிறார்கள். ஆனால் இது வரையிலும் எந்த முதலமைச்சரும் செய்யாததை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் C.ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சராக 2026-ல் பொறுப்பேற்று திறமையான முறையில் நல்லதொரு ஆட்சியை தமிழக மக்களுக்காக செய்து வருகிறார்.

தமிழக முதலமைச்சர் C.ஜோசப் விஜய் தமிழக வரலாற்றில் முதல் முறையாக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நேரில் அழைத்து கட்சி வேறுபாடு இன்றி ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்து இருப்பதன் மூலம் இந்த சிறப்பு மிக்க தருணத்தில் தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குரலாக தமிழக முதலமைச்சர் எடுக்கும் நல்லதொரு முடிவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும். 

மேலும் இப்படி பட்ட நல்லதொரு முயற்சி எடுத்த தமிழக முதலமைச்சர் -க்கு மனதார பாராட்டு தெரிவித்து உள்ளார்.

மேலும் இத்தருணத்தில் தமிழ்நாட்டில் உள்ள(ஒட்டு மொத்தமாக)அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் டெல்லி பாராளுமன்றத்தில் தமிழகத்தின் குரலாக ஒலிக்க வேண்டும் என்ற நோக்கில் அனைவரும் இணைந்து ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கட்சி பேதமின்றி உரிய மரியாதையுடன் அழைப்பு விடுத்து இருப்பது தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இருக்கும் மேலும் தமிழக முதலமைச்சரின் இச்செயல் மிகவும் பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad