மேச்சேரி காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம் – செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

மேச்சேரி காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம் – செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம்.


மேச்சேரி, ஆகஸ்ட் 25:
 


சேலம் மாவட்டம் மேச்சேரியில் உள்ள காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கணினி பயன்பாட்டியல் (BCA), கணினி அறிவியல் (CS), செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் (AI & DS) துறைகளின் சார்பில் “செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தை ஆராய்வோம்” என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.


25.08.2026 அன்று நடைபெற்ற இக்கருத்தரங்கில் கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவர் பிரபாதேவி வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் செல்வக்குமார் தலைமையுரையாற்றி, செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தார். கணினி பயன்பாட்டியல் துறை உதவிப் பேராசிரியர் ரிகானா, சிறப்பு விருந்தினரை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.


செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி குறித்து சிறப்புரை

கருத்தரங்கின் சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் ஸ்ரீ நேரு மகா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் துறை உதவிப் பேராசிரியர் திருமதி A. மஞ்சுரேகா, M.Sc., M.Phil., Ph.D., கலந்து கொண்டார். அவர் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, அதன் பல்வேறு பயன்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.


மேலும், மாணவர்களின் ஆர்வத்தையும் பங்கேற்பையும் அதிகரிக்கும் வகையில் சிறப்பு ஊடாடும் விளையாட்டுகள் நடத்தப்பட்டன. இவை மாணவர்களின் சிந்தனைத் திறன், குழு ஒத்துழைப்பு மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் அமைந்தன. நிகழ்வில் தி காவிரி கல்வி நிறுவனங்களின் கௌரவத் தலைவர் முனைவர் நடேசன், தலைவர் அன்பழகன், செயலாளர் பேராசிரியர் இளங்கோவன், தாளாளர் இராமநாதன், துணைத்தலைவர் மதன் கார்த்திக், இணைச் செயலாளர் ஹரிசங்கர், ஒருங்கிணைப்பாளர் ரேவதி இளங்கோவன், மாணவர் சேர்க்கைப் புல முதன்மையர் பேராசிரியர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மேலும், அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் கணினி பயன்பாட்டியல் துறை உதவிப் பேராசிரியர் விஜயலட்சுமி நன்றியுரையாற்றினார்.


செயற்கை நுண்ணறிவு துறையில் மாணவர்களின் அறிவையும் எதிர்காலத் தொழில்நுட்பத் திறன்களையும் மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற இக்கருத்தரங்கம் பயனுள்ளதாக அமைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad