வாணியம்பாடி அருகே 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு புகார் – ஊராட்சி அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 செப்டம்பர், 2026

வாணியம்பாடி அருகே 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு புகார் – ஊராட்சி அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா!

வாணியம்பாடி அருகே 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு புகார் – ஊராட்சி அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா!
வாணியம்பாடி,  செப்டம்பர் 4 - திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, 100 நாள் வேலை திட்டத்தில் முறை கேடுகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டி, ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பணித்தளப் பொறுப்பாளரை கண்டித்து 100 நாள் பணியாளர்கள் தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். ஆலங்காயம் ஒன்றி யம் வெள்ளக்குட்டை ஊராட்சியில் கடந்த 4 மாதங்களாக முறையாக வேலை வழங் கப்படவில்லை என்றும், இந்த ஆண்டு இது வரை 7 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளதாகவும் பணியாளர்க ள் குற்றம்சாட்டினர்.மேலும், கூலிதொகை முறைகேடாக மற்றொருவரின் வங்கிக் கணக்கிற்கு சென்றதாகவும், குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே வேலை மற்றும் பணி அட்டைகள் வழங்கப்படுவதாகவும் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை எனக் கூறி, ஊராட்சி அலுவல கம் முன்பு கோஷங்களை எழுப்பி தர்ணா வில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பணித்தளப் பொறுப்பாளர் தனசேகரிடம் போராட்டக்காரர்கள் கடும் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். பின்னர் ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்ற அவர்கள், அதிகாரிகளிடமும் மாவட்ட ஆட்சியர் ரவிகுமாரிடமும் புகார் தெரிவித்தனர்.புகார் குறித்துவிசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்ததை தொடர்ந்து, 100 நாள் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad