திருப்பத்தூரில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட 22 வயது பிரியாணி மாஸ்டர் போக்சோவில் கைது!
வாணியம்பாடி, செப்டம்பர் 4 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த (16 வயது) சிறுமி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போனதாக அவரது பெற்றோர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமி யை தேடி வந்த நிலையில், திருப்பத்தூர் கோட்டைத் தெருவைச் சேர்ந்த ரஹீம் என்பவர் சிறுமியை திருமணம் செய்து கொண்டு தலை மறைவாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது இதை யடுத்து சிறுமியையும் ரஹீமையும் போலீ சார் கண்டுபிடித்து மீட்டனர். தொடர்ந்து ரஹீம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக் குப் பதிவு செய்து, திருப்பத்தூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். (16 வயது) சிறு மியை திருமணம் செய்ததாக கூறப்படும் பிரியாணி மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்பத் தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக