ஆம்பூர் அருகே முன்னாள் மாணவர்கள்
ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பட்டு சேலை, வேட்டி சட்டை வழங்கி அன்பின் உபசரிப்பு !
வாணியம்பாடி, செப்டம்பர் 4 -
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல்சாணாங்குப்பம் பகுதியில் இயங்கி வரும் அரசினர் உயர்நிலைப் பள்ளியில்
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பெற்றோ ர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து, பள்ளியில் சிறப்பாக பணி யாற்றி வரும் அனைத்து ஆசிரியர்களுக் கும் அன்பின் உபசரிப்பாக பட்டு சேலை கள், வேட்டி மற்றும் சட்டைகளை வழங்கி ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித் தனர்.மேலும், அனைத்து மாணவர் களுக் கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர் ஒரு வர் 481 மதிப்பெண்கள் பெற்றதற்கு ஆசிரியர்களின் கடின உழைப்பு மற்றும் ஊக்குவிப்பே காரணம் எனக் கூறி, ஆசிரியர்களுக்கு பெற்றோர்களும் முன் னாள் மாணவர்களும் நன்றியை தெரி வித்தனர்.ஆசிரியர்களின் சேவையை போற்றும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக