ரோட்டரி சங்கம், பாலாறு வேளாண்மைக் கல்லூரி, அரசு தலைமை மருத்துவமனை இணைந்து நடத்தும் ரத்ததான முகாம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 செப்டம்பர், 2026

ரோட்டரி சங்கம், பாலாறு வேளாண்மைக் கல்லூரி, அரசு தலைமை மருத்துவமனை இணைந்து நடத்தும் ரத்ததான முகாம் !

ரோட்டரி சங்கம், பாலாறு வேளாண்மைக் கல்லூரி, அரசு தலைமை மருத்துவமனை இணைந்து நடத்தும் ரத்ததான முகாம் !
குடியாத்தம் செப்டம்பர் 4 
       வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செட்டிகுப்பம் பகுதியில் உள்ள  அரசு ஆதி திராவிடர் உயர்நிலைப் பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது குடியாத்தம் ரோட்டரி சங்கத் தலைவர் ரொட்டேரியன் டி. எஸ் .ரவிச்சந்திரன் தலைமை வகித் தார். மருத்துவ அலுவலர் டாக்டர் D. மஞ்சு நாதன், முன்னாள் தலைவர் செ.கு. வெங்கடேசன் னமுன்னிலை வகித்தனர்
கல்லூரி முதல்வர் பொறுப்பு பழனிச்சாமி வரவேற்புரையாற்றினார். முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் என். சத்திய மூர்த்தி முகாம் விளக்க உரையாற்றினார். ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர், ரத்ததான பிரிவு மாவட்ட ஆலோசகர்  ஜெ.கே என். பழனி முகாமைத் துவக்கி வைத்தார் ஊராட்சி மன்றத்  தலைவர் இந்திரா ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர் டில்லி பாபு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் .இம்மமுகாமில் 72 பேர் பரிசோதிக்கப்பட்டு 45 யூனிட் ரத்த தானம் பெறப்பட்டது. முகாமில் டாக்டர் ஹரிதா ,ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் ஏ. மேகராஜ் ,ரங்கா வாசுதேவன், சி. கண்ணன் ,கே. சந்திரன், வருங்கால தலைவர்கள் என். ஜெயச்சந்திரன், மதியழகன், உறுப்பினர்கள் எம். ஆர் .மணி, பாலமுருகன், பி. ஜெயக்குமார் ,ஆர். ஜெயக்குமார், திலீப் குமார், கோகுல், பொருளாளர்   Dr பாலாஜி ,ரத்ததான நிர்வாகிகள் எஸ். பிரேம்குமார், கே.எஸ். மணிகண்டன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முகாமின் ஒரு பகுதியாக பசுமை நாயகன் Rtn D.ராஜேந்திரன் அவர்கள் வழங்கிய மரக் கன்றுகள் நடப்பட்டது. முகாம் நிகழ்ச்சி களை என் எஸ் திட்ட அலுவலர்கள் ஜே. பிரபு, டாக்டர் மீனா ஆகியோர் ஒருங்கி ணைத்தனர் இறுதியாக இதில் புதிய. உறுப்பினர் கே பிரசாந்த் 18 வது முறை யாக ரத்த தானம் கொடுத்தார்  செய லாளர் ஜெ தமிழ்ச்செல்வன் நன்றி உரையாற்றினார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad